30 ஆகஸ்ட் 2023

எங்கள் தந்தையர் மொழி

 #எங்கள்_தந்தையர்_மொழி


கேனோபாயேன லகுனா

விஷ்ணோர்‌ நாம ஸஹஸ்ரகம்‌ 

பட்யதே பண்டிதைர்‌ நித்யம் 

ச்,ரோதுமிச்சாம்யஹம்‌ ப்ரபோ 


என விஷ்ணு சஹஸ்ரநாமம் குறித்து

பார்வதி கவலை அதற்கு சிவபிரான் வழி சொல்வது போல் ஒரு சமஸ்கிருத உரையாடல் வருகிறது. 


எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. 


ஆனால் கொஞ்சம் யோசித்தால் தமிழர்களால் சமஸ்கிருதத்தை ஓரளவு புரிந்துகொள்ள இயலும்.


கேனோபாயேன லகுனா

விஷ்ணோர்‌ நாமஸஹஸ்ரகம்‌ 

பட்யதே பண்டிதைர்‌ நித்யம் 

ச்,ரோதுமிச்சாம்யஹம்‌ ப்ரபோ


ஏதாவது புரிகிறதா..? 


இப்போது படியுங்கள்..


கேநோ | உபயே | இலகுவா | விஷ்ணோர் நாம | சஹஸ்ரகம் | பட்யதே பண்டிதைர் |நித்யம் | ஸ்ரோத்திர இச்சாம் | அஹம் ப்ரபோ -


கேநோ | உபயம் | இலகுவா | விஷ்ணு நாம சஹஸ்ரகம் | பட்யதே பண்டிதர் | நித்யம் | ஸ்ரோத்திரம் இச்சாம் | அஹம் பிரபு 


இப்போது இதில் நமக்கு பொருள் புரியாத வார்த்தைகள் கேனோ - இச்சம் இவை இரண்டும் மட்டும் தான். இவைகளை கூட இன்னும் ஊன்றி படித்து யோசித்தால் பொருள் புரிந்து விடும்.


ச = ஜா 

ச = யா 


ஆயர் = ஆர்யா 

அரசன் = ரஆசன் 

ராசன் = ராஜன்


ராசன் = ராயன்

யமுனா = ஜமுனா


பழந்தமிழின் ஒலிகள் இடம் மாறி, சேர்ந்து, தலைகீழ் செய்து, இட வலம் உருவாக்க பட்ட ஒரு குறியீட்டு ஸ்லோக மொழி தான் சமஸ்கிருதம். அதை பேசுவதற்கு படைக்கபட்ட மொழி அல்ல. அதில் பேசவும் முடியாது.


6 ஆம் நூற்றாண்டிற்கு முன் வரை எந்த இலக்கிய இலக்கணங்களையும் ஆரியர்கள் எழுதியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அதற்கு முன் இலக்கியங்களை படைத்தவர்கள் எல்லாம் ஆரியர் அல்லாதவர்களே. அதிலும் குறிப்பாக இன்று தாழ்த்தப்பட்டவர்களாக அறியப்படுகின்றவர்களின் மூதாதையர்கள் தான் சமஸ்கிருதத்தில் ஏராளமான படைப்புகளை ஏற்றுள்ளனர். சமஸ்கிருதத்தை படைத்தனர். சமஸ்கிருதம் பறையர்களின் மொழி.


#சமஸ்கிருதம்

28 ஜூலை 2023

கோவில்

 #கோவில் 


தமிழக நிலப்பரப்பில் கோவில்களை பக்தியின் இருப்பிடமாக பார்ப்பது தான் நம் சமூகத்தின் பொதுப் புத்தியாக இருக்கின்றது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாக, அரசர்களின் அரும்பெரும் சாதனைகளாக, வணிகர்களின் வரலாற்றுச் சின்னங்களாக இன்றும் புகழப்பட்டு வருகிறது. 


வளங்கொழிக்கும் இலட்சக்கணக்கான ஏக்கர்கள் நிலங்கள் கோவில்களுக்கு உடமையாக்கப்பட்டு இருக்கிறது. அந்த நிலங்கள் அனைத்தும் இறைவனுக்கு உரியன, இறைவனுக்கு உரியவை அனைத்தும் புனிதமானவை. ஆகவே மக்கள் அனைவரும் இந்த நிலங்களை கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வர வேண்டும். இதுவே குடியானவர்கள் கடமை என்றும், இந்த பெருத்த நில உடமைகள் அனைத்தும் கோவிலின் பொது சொத்துக்கள் என்றும் பெரும்பான்மையாக இருக்கின்ற உழைக்கும் மக்களிடம் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறது.


ஆனால் கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதிகளும் அவர்களது சூத்திர கூட்டாளிகளும் மட்டுமே நிலத்தின் மீதான உரிமைகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறனர். அதன் ஊடாக கிராம நிர்வாகங்களில் அதிகாரம் செலுத்தி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் கிராம நிர்வாகங்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையே கோவிலின் பெயரால் ஏகபோகமாக ஆண்டு வருகின்றனர், அனுபவித்து வருகின்றனர், அதிகாரம் செலுத்தி வருகின்றனர். 


கோவில் நிலம் சாதி ஆகிய மூன்றுக்கும் பொதுவான பெரும் தொடர்பு இருக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள் கோவில்களில் இருந்தே துவங்குகிறது. பக்தியின் ஊடாக உருவாக்கப்பட்ட கோயில்கள் மனிதர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை புனிதம் என்கின்ற பெயரில் நியாயமாகிறது. நிலத்தின் மீது உரிமை கொண்டாடுகிறவன் அதிகாரத்தின் மீது உரிமை கொண்டாடுகிறான். நிலமற்றவன் அதிகாரம் அற்றவனாக இருக்கின்றான். 


கோயிலுக்குள் வராது என்பதும்,

கோயிலுக்கு போகாதே என்பதும்.. உழைக்கும் மக்களை அதிகாரம் அற்றவர்களாக தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் தானோ? 


*சமரன்*