14 ஜனவரி 2011

வாழ்த்துக்களுடன்





தூரத்து பறவைகளின்
கொஞ்சலோடு
‌‍துயில் எழும் விடியல்,

பனித்துளி தொட்டிட
நாணத்தால்
தலை கவிழும் புல்லிஇதழ்,

மொட்டுக்களின் அன்பை
ஆசை ஆசையாய்
சுற்றி வரும் வண்ணத்துபூச்சி,

தன்னை நேசிக்கும்
கூழங்கல்லுக்கு
பதிலேது கூறாது ஓடிடும் நீரோடை,

கரையோரத்து மவுனங்களுக்கு
விடை புரியாது
தடுமாறும் கடலலை,

மழை ஜன்னலுக்கு பின்னால்
எட்டி பார்க்கும்
வானவில் பெண்,

மலை முகட்டில் ஒளிந்த சூரிய காதலனை 
மேகமுக்காட்டை விலக்கி
தேடவருகின்ற நிலா காதலி,

இப்படி..
தூரிகை தொடாத ஓவியங்களாய்
நிறையவே என்னுள்.
மயில் இறகை  பத்திரப்படுத்தும்
ஒரு குழந்தை தனத்தை போலவே

என் நினைவு பக்கங்களில் செதுக்கி
எண்ணி மகிழ்கிறேன்!
கூடவே
உங்களின் ஒவ்வொரு மணித்துளியும்..,


    
நெஞ்சார்ந்த
தமிழ் புத்தாண்டு 
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்..


விநாயகமூர்த்தி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக