23 ஆகஸ்ட் 2012

க்லைடாஸ்கோப் காரா


- dharshni rajan.

ஆச்சர்யாமாக இருக்கிறது ,உன்னை நினைத்தால் ...
உடைந்து போன 
வளையில் துண்டுகளை கூட 
சித்திரங்கள் என்று 
சிலாகித்து கொள்ள வைக்கிறாய் !

எழுத்துக்களில் 
வசியம் தோய்க்க 
எப்படி கற்றாய்?

தீ பிடிக்கும் உன் வார்த்தைகள் 
சமயங்களில் 
பனிபோர்வைக்குள் பயணிப்பதையும் 
காணமுடிகிறது. 

இளவயது காலங்களில் 
ஏதேதோ 
செய்தாயாமே...
சமரன் பற்றிய குறிப்புகளில் 
சங்கதி அறிந்தேன்.

நிறைய பேச நெடுநாள் வேண்டும்.
ஒரு நாள் வருவேன் 
ஓயாமல் பேச....
 —






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக