மணிப்பூரில் நடப்பது என்ன? மணிப்பூரில் நடப்பது மதக் கலவரமா? அல்லது இன கலவரமா?
மணிப்பூர் மாநிலம் 90% மலைகளையும் 10% சமவெளியையும் அடக்கிய நிலப் பகுதிகளைக் கொண்டது. மேத்தே ,குக்கி மற்றும் நாகா என்கிற மூன்று முக்கியமான இனங்கள் இந்த பகுதியில் வசிக்கின்றன. இவர்களைத் தவிர சிறு சிறு இனக் குழுக்களும் இந்தப் பகுதியில் உண்டு. மணிப்பூர் உடனடியாக இந்தியாவில் இணையவில்லை கொஞ்சம் வருடங்கள் கழித்து தான் இந்தியாவில் இணைந்தது.
இந்த மேத்தே இன மக்கள் 10 சதவீத சமவெளியை உள்ளடக்கி உள்ள பகுதிகளில் வாழ்கிறார்கள் இவர்கள் விவசாயம் செய்கிறார்கள் கனிம வளம் உள்ள பூமி. மேலும் மணிப்பூர் மக்கள் தொகையில் 52% இந்த மேத்தே இன மக்களே... இதனால் இவர்களிடம் தான் அதிகாரம் எல்லாம் உள்ளது கிட்டத்தட்ட 60 சட்டமன்ற உறுப்பினர்களின் 40 எம்எல்ஏக்கள் இந்த இனத்தை சார்ந்தவர்கள் தான். அரசியல் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் கொள்கை முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் எல்லாம் இந்த மேத்தே இன மக்களிடம் தான் இருக்கிறது. 52 சதவீதம் போக மக்கள் தொகையில் அதிகமாக இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் நாகா இன மக்கள். இவர்கள் நாகலாந்து இல் இருந்து வந்து குடியேறியவர்கள். இவர்கள் 11 சட்டமன்ற உறுப்பினர்களை தன் இனத்தில் வைத்திருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக