21 ஜூலை 2023

மணிப்பூர் கலவரம் 2

 மீதி இருப்பவர்கள் தான் குக்கி இன மக்கள். இதில் தான் 70% கிறிஸ்தவ மக்கள் இருக்கிறார். மற்றும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களும் இந்த குக்கி இனத்தில் உண்டு .இவர்கள் இனத்தில் இருந்து ஒன்பது எம்எல்ஏக்கள் மட்டுமே இவர்கள் இருப்பார்கள். எந்த அரசியல் அதிகாரமும் முடிவெடுக்கக்கூடிய ஆளுமையும் இவர்களிடத்தில் கிடையாது. இந்த குக்கி மற்றும் நாகா மக்கள் தான் தொண்ணுறு சதவீதம் மலைகள் உள்ள பகுதிகளில் வாழ்கிறார்கள்.

இப்பொழுது பிரச்சனை இந்த குக்கி மற்றும் மேத்தே இன குழுக்களுக்கு இடையே தான். அதை என்னவென்று பார்க்கும் முன்பாக மணிப்பூரில் ஒரு சில அரசியல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 90 சதவீதம் மலை பகுதிகளில் வாழும் அனைவருமே ஷெட்யூல் ட்ரைப் (ST) அட்டவணை பிரிவில் இருக்கிறார்கள். இந்த 90% மலைகள் உள்ள இந்த இடத்தில் ஒருவர் நிலம் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் கண்டிப்பாக ஷெடியூல் ட்ரைப் ஆக இருந்தாக வேண்டும். மேத்தே இன மக்கள் இந்த இடத்தில் நிலங்கள் வாங்க முடியாது. ஏனென்றால் அவர்கள் ஷெட்யூல் ட்ரைப் நிலைமையில் இல்லை. மேலும் மணிப்போரின் பூர்வீக குடிமக்கள் இந்த குக்கி இனத்தவர்கள் தான்..

இந்த குக்கி இன மக்கள் இயல்பாகவே கிறிஸ்தவ மதத்தை பல காலத்திற்கு முன்பாகவே ஏற்றுக்கொண்ட படியினால் கிறிஸ்தவ மிஷனரிகள் கொண்டு வந்த கல்வி சாலைகளில்ல் அதிகம் இருந்ததினால் அவர்கள் இயல்பாகவே ஒரு படித்த சமுதாயமாக அவர்கள் உருவாக ஆரம்பித்தனர். இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் வசதி ஏற்பட்டவுடன் இந்த 10 சதவீதம் நிலம் வைத்திருக்கிற மேத்தே மக்கள் வாழும் சமவெளிகளில் நிலத்தை வாங்கி அங்கு குடியேற ஆரம்பித்தனர். அதே நேரத்தில் மேத்தே இன மக்கள் 90% நிலங்களை வைத்திருக்கிற இந்த குக்கி மக்கள் வாழும் பகுதிகளில் நிலங்கள் வாங்க முடியாது.

இவர்கள் எங்கள் பகுதிகளில் வந்து குடியேறுகிறார்கள் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம் என்கிற பிரச்சனை காலம் காலமாக கொஞ்சம் கொஞ்சமாக இருந்து கொண்டு தான் இருந்தது. அதேநேரம் குக்கி இன மக்கள் மணிப்பூர் எங்களுடைய சொந்த மண் ஆனாலும் எங்களால் இந்த மண்ணை ஆள முடியாது எங்களால் எந்த அரசியல் முடியும் எடுக்க முடியாது நாங்கள் வெறும் ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களைத் தான் வைத்திருக்கிறோம். எங்களால் எந்த அரசியல் முடிவும் எடுக்க முடியாது அதனால் எங்கள் இனத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது அதனால் நாங்கள் படித்து முடித்து வேலை பார்த்து ஒரு நல்ல இடத்தில் நிரந்தரமாக வாழத்தான் ஆசைப்படுகிறோம் அதற்கு அனுமதி கிடையாதா என்று கேட்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக