21 ஜூலை 2023

மணிப்பூர் 3

 மேத்தே இன மக்கள், தற்பொழுது பர்மாவில் இருந்து ஆங்கிலேயர்களால் சண்டை போடுவதற்காக அழைத்து வரப்பட்ட குக்கிகளை (குக்கி இனத்தவர் இரண்டு இடங்ககளிலும் வாழ்கிறார்கள் மணிப்பூரிலும் பர்மாவிலும் வாழ்ந்தார்கள்.) வெளியேற்ற வேண்டும் என்று தற்பொழுது பிரச்சினையை ஆரம்பித்தார்கள். அதற்கு குக்கீின மக்கள் அவர்கள் பர்மாவிலிருந்து இங்கே வந்தாலும் அவர்களும் எங்கள் இனம் தான் எங்கள் மொழி தான் பேசுகிறார்கள் அதனால் அவர்களை வெளியேற்றக் கூடாது என்று எதிர் வாதம் வைக்க பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதானது.

இதை தான் ஊதி பெரிதாக்கி இருக்கிறது மத்தியில் உள்ள சமூக அதிகாரம். அவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் சொற்களை கேட்டு செயல்படுகிறார்கள் .அவர்கள் தேச விரோதிகள் என்று தேசபக்தி பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது தான் இந்த கலவரத்திற்கு மூல காரணம்.(இந்த சொல்லாடல் முகநூலில் நாம் அடிக்கடி பார்க்கலாம் கிறிஸ்தவ மிஷனரி கும்பல் என்று).

இதற்கு எரிகிற கொல்லியில் எண்ணெய் வார்த்தது போல இந்த மேத்தே இன மக்களுக்கும் ஷெட்யூல் ட்ரைப் (ST) அந்தஸ்து கொடுத்து இருக்கிறது மத்தியில் உள்ள சமூக அதிகாரம். ஏற்கனவே மேத்தே இன மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் எந்த அரசியல் முடியும் அவர்களால் மட்டுமே மணிப்பூர் மண்ணில் எடுக்க முடியும். இவர்களுக்கும் ஷெட்யூல் ட்ரைப் (ST)கொடுத்து விட்டால் ஏற்கனவே ஆட்சி அதிகாரத்திலும் இருக்கிற அவர்கள் இதனால் இன்னும் பலம் பொருந்தியவர்கள் ஆகிவிடுவார்கள். மக்கள் தொகையிலும் அவர்கள் அதிகம் அவர்கள் எங்கள் பகுதியில் வந்து நிலம் வாங்கி ஆட்சி அதிகாரம் முழுமையும் அவர்கள் அதிகாரத்துக்குள்ளாக போய்விடும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படும். இருக்கிற வாழ்க்கையும் நாங்கள் விட்டுவிட நேரிடும் என்று குக்கி இன மக்கள் பயப்பட இப்படித்தான் பிரச்சனை பெரிதானது.

நாங்கள் 10% நிலப்பகுதியில் மட்டுமே வாழ்கிறோம் மலைகளில் இருந்து படித்து நல்ல நிலையில் இருக்கிறவர்கள் இங்கே வந்து நிலம் வாங்கினால் எங்களுக்கென்று இருக்கிற 10% நிலமும் எங்கள் கையை விட்டுப் போய்விடும் என்று மேத்த இன மக்கள் கவலைப்படுகிறார்கள். அதனால் எங்களுக்கும் ஷெட்யூல்ட் ட்ரைப் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் போராடுகிறார்கள். இதில் கவனிக்கத்தக்க விஷயம் இந்த ஷெட்யூல் ட்ரைப் அந்தஸ்து ஒரு காலத்தில் பல வருடங்களுக்கு முன்பாக மத்திய ஆட்சியில் இருந்து அதிகாரங்கள் கொடுக்க முன் வந்த பொழுது எங்களுக்கு அது தேவையில்லை அவர்கள் தான் மலைகளில் இருந்து வாழ்கிற பழங்குடி மக்கள் அவர்களுக்கு கொடுங்கள் என்று இதற்கு முன்னாடி கூறினார்கள். ஆனால் இப்பொழுது அதே கோரிக்கை இவர்களை வைத்திருப்பது தான் வினோதம்.

குக்கி இன மக்கள் ஷெட்யூல் ட்ரைப்ஷப் அந்தஸ்து அவர்களுக்கு கொடுக்கக் கூடாது நாங்கள் எங்களுடைய நிலப்பகுதி மட்டுமல்ல சுத்தமாக அதிகாரத்தையும் இழந்து விடுவோம் மேலும் எங்களோடு வாழ்கின்ற எங்களுடைய இனமாகிய பர்மாவில் இருந்து வந்து குடியேறிய குக்கி இனத்தையும் நாங்கள் வெளியேற்ற மாட்டோம் என்று உறுதியாக நிற்கிறார்கள். இது கவனிக்கத்தக்கப்பட வேண்டிய விஷயம் மணிப்பூர் என்கிற ஒரு மாநிலம் உருவாவதற்கு முன்னே இந்த பர்மாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒரு பகுதி குக்கி இன மக்கள் அங்கு வாழ ஆரம்பித்து விட்டன. இப்பொழுது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்று தெரியவில்லை? இது எப்படி என்றால் இலங்கையில் ஈழத் தமிழர்கள் மலையக தமிழர்கள் என்று இருப்பது போல். ஈழத் தமிழர்கள் பூர்வீக கொடி. மலையகத் தமிழர்கள் வேலைக்கு சென்றவர்கள் ஆனாலும் அவர்கள் அங்கேயே வாழ்ந்த ஈழத்தில் வாழும் பூர்வகுடி தமிழர்கள் ஆகவே மாறிவிட்டனர். அது போன்ற கதை தான் மணிப்பூரிலும்.

இந்த பிரச்சனையில் மத்திய அரசு எரிகிற கொல்லியில் எண்ணெயை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இது எல்லாம் மதமாற்று கும்பல் செய்கிற வேலை என்றும் இது மதப் பிரச்சினை என்றும் அவர்கள் தேச விரோதிகள் என்றும் இப்படி பொய்யான பிரச்சனை அங்கு மிக வேகமாக கால் ஊன்றி வெடித்தது பயங்கரமான கலவரம்.

தற்பொழுது மேத்தே இன மக்கள் தங்கள் பகுதிகளில் குடியிருக்கிற குக்கி இன மக்கள் வெளியேற வேண்டும் இல்லையென்றால் தாக்கப்படுவார்கள் என்று கூறிக்கொண்டு அவர்களை கடுமையாக தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் நாம் தற்போது தொலைக்காட்சி பெட்டிகளில் செய்தியாக பார்ப்பது. இவர்கள் மலைப் பகுதிகளுக்கு சென்று குக்கி இன மக்களை தாக்க முடியாது ஏனென்றால் இரண்டு குழுக்களுமே ஆயுதம் வைத்திருக்கிறது. அதனால் அவருடைய கோபம் வெறியாக மாறி தங்கள் பகுதிகளில் படித்து முன்னேறி நில வாங்கி குடியேறிய குக்கி இன மக்களை நோக்கி வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது.

வெளி உலகுக்கு இனக் கலவரமாக தெரிந்தால் தமக்கு ஆதரவு கிடைக்காது என்று எண்ணுகிற மத்திய அரசாங்கம் அதை மத மோதல் போல சித்தரித்து கொண்டு வருகிறது. இரண்டு தரப்பில் ஒரு சில நியாயங்கள் இருக்கிறது. ஏற்கனவே மேத்தே இன மக்கள் தற்பொழுது மத அடிப்படைவாத கும்பலில் விழுந்து விட்டதினால் , இவர்களுக்கு செடியுல் ட்ரேப் அந்தஸ்து கொடுத்தால் கொஞ்சம் இருக்கும் அதிகாரத்தையும் மொத்தமாக நாம் இழந்து விடுவோம் என்று குறைந்த ஜனத்தொகை கொண்ட குக்கி மக்கள் பயப்படுகிறார்கள்.

இதுதான் அங்கு பிரச்சனை. மணிப்பூரின் பூர்விக குடிமக்கள் இந்த குக்கி இன மக்களே. ஏனென்றால் 90 சதவீதம் நிலப்பரப்பு இந்த இன மக்களிடையே தான் இருக்கிறது. ஆனால் 60 எம்எல்ஏக்களில் இந்த நிலப்பரப்பில் அவர்களுக்கான இடம் வெறும் 9 எம்எல்ஏக்கள் மட்டுமே. அதனால் அவர்கள் எதிர்காலத்தில் நமது இனத்திற்கு தேவையான எந்த முடிவும் அதிகாரத்தையும் அவர்கள் சட்ட வடிவில் கொண்டு வர முடியாது. மேலும் மேத்தே இன மக்களுக்கு செடுயூல் ட்ரைப்(ST) என்ற அந்தஸ்து கொடுத்து விட்டால் இன்னும் அவர்களுடைய நிலைமை மோசமாகிவிடும் என்பதினால் தான் அவர்கள் அதை கடுமையாக எதிர்க்கிறார்கள்...

மேத்தே இன மக்கள் இந்து மக்கள் என்பதெல்லாம் கிடையாது. முருகனைப் போன்று தோற்றம் உடைய ஒரு தெய்வத்தை உள்ளடக்கிய சனமாயிசம் என்கிற வழிபாடு அவர்களிடத்தில் தான் பூர்வீக வழிபாடாக இருக்கிறது. ஆனால் தற்பொழுது இந்து மதத்தை உள்ளடக்கியும் அவர்கள் இருக்கிறார்கள். எப்படி நாம் குலதெய்வ வழிபாடு முன்னோர் வழிபாடு என்று வைத்துக்கொண்டு சைவம் வைணவம் என்பதையும் வணங்குகிறோமோ அப்படித்தான் மேத்தே மக்கள். அதனால் இங்கு மதம் உள்நுடய தேவையே கிடையாது இந்த இனத்தில் கிறிஸ்தவர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

அதனால் கொஞ்சம் கூட இது மதச் சண்டையே கிடையாது முழுக்க முழுக்க இன சண்டை மட்டுமே. ஏனென்றால் இரண்டு சமுதாய மக்களிலும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள். எனவே மணிப்பூர் கலவரம் என்பது தமிழர்களாகிய நமக்கு மறைமுகமாக கொடுக்கப்பட்ட ஒரு பாடம். ஒரு இன அதிகாரம் மொழி அதிகாரம் எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு இந்த கலவரத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.... இது போன்ற இனச் சண்டை தமிழ்நாட்டிலும் நடக்க வாய்ப்பு இல்லை என்பதை நாம் மறுக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக